Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் ... உலகப் பிரசித்தி பெற்ற பெருமாளுக்கு மாங்காய் ஊறுகாய் நைவேத்யம்! உலகப் பிரசித்தி பெற்ற பெருமாளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்துாரில் ஆவணி திருவிழா; வெற்றி தரும் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்துாரில் ஆவணி திருவிழா; வெற்றி தரும் வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி சண்முகர் உலா

பதிவு செய்த நாள்

30 ஆக
2024
12:08

திருச்செந்துார்; திருச்செந்துார், சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆவணி திருவிழாவில் இன்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில், வீதியுலா வந்து அருள்பாலிக்கிறார். 


திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணி திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் 6ம் நாளான நேற்று இரவு சுவாமி குமரவிடங்கபெருமான் வெள்ளித்தேரிலும், வள்ளிஅம்பாள் இந்திர வாகனத்திலும் எழுந்தருளி, உள் மாடவீதிகள் மற்றும் ரத வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழாம் திருநாளை முன்னிட்டு, இன்று அதிகாலை 5:00 மணிக்கு மேல் 5:30 மணிக்குள், கடக லக்கனத்தில் சுவாமி சண்முகரின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து, 8:45 மணியளவில் ஆறுமுகநயினார் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி, பக்த பெருமக்களுக்கு வாழ்வில் வெற்றியையும் ஏற்றத்தை தரும் ஏற்ற தரிசனம் கொடுத்து, பிள்ளையன்கட்டளை மண்டபத்தை வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் சுவாமி சண்முகப்பெருமான் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி சிவன் அம்சத்தில் எழுந்தருளி, வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை (31ம் தேதி) அதிகாலை 5:00 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி பிரம்மன் அம்சத்தில் வீதி உலாவும், பகல் 10:30 மணிக்கு மேல் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி விஷ்ணு அம்சத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயில் வந்து சேர்க்கையாகிறார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar