பதிவு செய்த நாள்
30
ஆக
2024
03:08
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கோட்ராம்பாளையம் தெருவில், செல்வ விநாயகர், ரேணுகா தேவி அம்மன் கோவில் உள்ளது. 150 ஆண்டுகள் பழமையான இக்கோவில் கும்பாபிஷேகம், கடந்த 2009ல் நடந்தது. இதையடுத்து, இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். கோவில் ராஜகோபுரம் மற்றும் பிற சன்னிதிகளுக்கு வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணி சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை ஒட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், லஷ்மி ஹோமம், தனபூஜை, மாலை 6:00 மணிக்கு பிரவேசபலி, வாஸ்து ஹோமம், முதற்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், காலை 9:30 மணிக்கு செல்வ விநாயகர், ரேணுகா தேவி கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிப்பட்டனர்.