பதிவு செய்த நாள்
30
ஆக
2024
05:08
உடுமலை; உடுமலை, பெரியகடை வீதி நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழாவில் இன்று காளிங்க நர்த்தன கண்ணன் அலங்காரத்தில் எம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உடுமலை பெரிய கடை வீதியிலுள்ள, ஸ்ரீ பூமிநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசபெருமாள் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா, கடந்த, 27ம் தேதி துவங்கி, கோலாகலமாக நடந்து வருகிறது. முதல் நாள், கண்ணன் பிறந்த நாள், திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி பாசுரங்கள் சேவையுடன், நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். இரண்டாம் நாளில், தவழும் கண்ணன் வடிவில் எழுந்தருளினார். நேற்று மாலை, 3:30 மணிக்கு, காளிங்க நர்த்தன கண்ணனாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருமாலை, திருப்பள்ளி எழுச்சி, அமலனாதி பிரான், கண்ணிநுன் சிறுதாம்பு, பெரிய திருமொழி பாசுரங்கள் ஒலிக்க, நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.