பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
ஊட்டி: ஊட்டி ரேஸ்வியூரோடு பகுதியில் உள்ள மகா முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி நடக்கிறது. ஊட்டி ரேஸ்வியூ பகுதியில் அமைந்துள்ள மகா முனீஸ்வரர் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது. அன்று மாலை 6.05 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், வாஸ்துசாந்தி, கும்ப அலங்காரம், வேதிகா அர்ச்சனை, முதற்கால வேள்வி, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை, சுவாமி பிரதிஷ்டை, நடக்கிறது. 26ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வேதிகா அர்ச்சனை, இரண்டாம் கால வேள்வி, நாடிசந்தானம், திரவியாகுதி, மகா பூர்ணாகுதி, தீபாராதனை, நடக்கிறது. காலை 7.10 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 7.25 மணிக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் நடக்கிறது. பகல் 12.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.