பதிவு செய்த நாள்
19
நவ
2012
11:11
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி திருநாள் கால நிர்ணய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோவிலில் கைசிக ஏகாதசி திருநாள் முக்கியமான ஒன்று. ஆண்டுதோறும் இந்த திருநாள் வெகு விமர்சøயாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு கைசிக ஏகாதசி திருநாள் கால நிர்ணய விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
கோவில் செயல் அலுவலர் கல்யாணி அறிக்கை: நவ., 24ம் தேதி முதல் புறப்பாடு: காலை, 10 மணிக்கு, நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு, 10.30 மணிக்கு சந்தனு மண்டபம் சேர்தல், 11.30 மணி முதல் பகல், 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளல், மாலை, 5.30 மணிக்கு அலங்காரம் அமுது செய்து மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பாடு, 5.45 மணிக்கு மூலஸ்தானம் சேர்தல். நவ., 24, இரண்டாம் புறப்பாடு: இரவு, 8.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு, 9 மணிக்கு அர்ச்சுன மண்டபம் சேர்தல், 9.30 மணி முதல், 11.30 மணி வரை நம்பெருமாளுக்கு, 365 வஸ்திரம் வேளையம் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்தல் அரையர் சேவையுடன், இரவு, 11.30 மணி முதல் 25ம் தேதி அதிகாலை, 2 மணி வரை, ஸ்ரீபட்டர் கைசிக புரணாம் வாசித்தல், காலை, 5.15 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பாடு, 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை, 6 மணிக்கு மூலஸ்தானம் சேருதல்.
24ம் தேதி மூலஸ்தான சேவை விவரம்: விஸ்வரூப தரிசனம் உண்டு. காலை, 7.30 முதல், 10 மணி வரை, பூஜா காலம் புறப்பாடு. காலை, 10 முதல், மாலை, 5 மணி வரை சேவை நேரம். மாலை, 5 மணிக்கு மேல் மூலஸ்தன சேவை கிடையாது. மற்ற சன்னதிகளில் இரவு, 8 மணிக்கு மேல் சேவை கிடையாது.
கார்த்திகை திருநாள் முதல் புறப்பாடு: நவ., 28ம் தேதி கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது. காலை, 9 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தான புறப்பாடு, 9.30 மணி சந்தனு மண்டபம் சேர்தல், காலை, 11 - 1 மணி வரை, திருமஞ்சனம் கண்டருளல், மாலை, 4.30 மணி அலங்காரம் அமுது செய்து மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பாடு, 5 மணி மூலஸ்தானம் சேர்தல், 6 மணி ஸ்ரீஉத்தமநம்பி ஸ்வாமிகள் இடைவிளக்கு ஏற்றுதல். இரண்டாம் புறப்பாடு: இரவு, 8 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு. 8.30 மணி சொக்கப்பனை கண்டருளல், 9.15 மணி தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளி சந்தனு மண்டபம் சேர்தல், 9.45 மணி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையுடன் மூலஸ்தனம் சேர்தல். மூலஸ்தன சேவை விவரம்: விஸ்வரூப சேவை கிடையாது. காலை, 9.15 முதல், மதியம், 1 மணி வரை, சேவை. மதியம், 1-2 மணி பூஜா காலம். மதியம், 2 முதல், மாலை, 4.15 மணி வரை சேவை. மாலை, 4.15 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.