Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி மூன்றாம் சனி; கோவை ... திருச்செந்துார் ஆவணி திருவிழா; விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் சண்முகர் வீதியுலா திருச்செந்துார் ஆவணி திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமெரிக்க ஹிந்து கோவிலுக்கு செல்லும் காஞ்சியில் தயாரான தங்க தேர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அமெரிக்க ஹிந்து கோவிலுக்கு செல்லும் காஞ்சியில் தயாரான தங்க தேர்

பதிவு செய்த நாள்

31 ஆக
2024
12:08

காஞ்சிபுரம்; அமெரிக்காவின், வாஷிங்டன் மாகாணம், சியாட்டலில் ஹிந்து வேதா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, புதிதாக தங்க தேர் செய்து கொடுக்க, காஞ்சிபுரத்தில் உள்ள ‘ராஜா ஆன்மிக பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திடம், கோவில் நிர்வாகம் கேட்டிருந்தது. கோவில் நிர்வாகம் கூறியிருந்தபடி 23 அடி உயரம், 8 அடி அகலம் உடைய தாமிர உலோக தேரின் மீது, தங்க முலாம் பூசும் பணி நிறைவடைந்தது. இந்த தேர் பெங்களூரு விமான நிலையம் வாயிலாக, அமெரிக்காவுக்கு நேற்று அனுப்பப்பட்டது.


இதுகுறித்து காஞ்சிபுரம் ராஜா ஆன்மிக பிரைவேட் லிமிடெட் இயக்குனர் நாகராஜன் கூறியதாவது: இந்த தங்க தேரின் முக்கிய பாகங்கள், மரத்தால் இல்லாமல் இரும்பால் செய்யப்பட்டு உள்ளன. தேர் எட்டு பாகங்களாக எளிதாக பிரிக்க முடியும். அதேபோல, குறுகிய இடத்தில் எளிதாக 35 டிகிரி வரை திருப்ப முடியும். தேரின் மீது, தாமிர தகடுகளில் ‘எலக்ட்ரோ பிளேட்டிங்’ முறையில் தங்க முலாம் பூசப்பட்டுஉள்ளது. தேர் செய்யும் பணியில், ஆறு குழுக்களாக, ஒரு குழுவுக்கு 6 பேர் வீதம், 36 பேர் சேர்ந்து, 75 நாட்களில், இரவு, பகலாக பணியில் ஈடுபட்டோம். இதன் மொத்த எடை 3.50 டன்; மதிப்பு 1.25 கோடி ரூபாய். தேரின் மேல் பாகம் நான்கு நிலைகள் உள்ளன. அதில், கருடன் மற்றும் கந்தர்வன் சிலைகளும், முகப்பில் இரு குதிரைகளை சூரிய பகவான் இயக்குவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களில் அமெரிக்காவில் உள்ள கோவிலுக்கு சென்றடையும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: : திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
திருமலை: கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பாரம்பரியமான ... மேலும்
 
temple news
சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
காங்கயம்: காங்கயம் அருகே உள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் தேர்த்திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar