Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னம்பாளையம் எமதர்மர் கோவிலில் ... சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணி தேரோட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் ராஜகோபுரத்தை மறைக்கும் மண்டபம்
எழுத்தின் அளவு:
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் ராஜகோபுரத்தை மறைக்கும் மண்டபம்

பதிவு செய்த நாள்

02 செப்
2024
02:09

மாமல்லபுரம்; ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், மாமல்லபுரத்தில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியர் வீற்றுள்ளனர். இங்கு அவதரித்த பூதத்தாழ்வார் உள்ளிட்ட பன்னிரு ஆழ்வார்களும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். 108 வைணவ திவ்ய தேசங்களில் 63வதாகவும், நிலம் சார்ந்த தோஷங்களுக்கு பரிகார கோவிலாகவும் விளங்குகிறது. இக்கோவிலில், ராஜகோபுரம் உள்ளிட்ட திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த 1998ல் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 25 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. ராஜகோபுரத்திற்கு முன்புறம், பழங்காலம் முதல் 16 கால் மண்டபம் இல்லை. எனவே, நன்கொடை வாயிலாக, இந்த மண்டபம் கட்ட, நீண்டகாலத்திற்கு முன் முடிவெடுக்கப்பட்டது. கோவில் அருகில், அர்ஜுனன் தபசு சிற்ப பாரம்பரிய சின்னம் உள்ள நிலையில், தொல்லியல் துறையின் தடை காரணமாக முன்புற மண்டபம் கட்டப்படவில்லை.


இந்நிலையில், தனிநபர் ஒருவர் நன்கொடை வசூலித்து, தன்னிச்சையாக மண்டபம் கட்டி, கடந்த 2018ல், புதிய மண்டபத்திற்கு மட்டும், தனியாக கும்பாபிஷேகம் நடத்தினார். அதன் முகப்பில், ஸ்தலசயன பெருமாள் சுதைச்சிற்பத்துடன், சிறிய கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் கோபுரம், கோவிலின் பிரதான ராஜகோபுரத்தை மறைப்பதாக உள்ளது. கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த பிப்.,1ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால், நுழைவாயில் பகுதியிலிருந்தே ராஜகோபுரத்தை தரிசிக்க வசதியாக, மண்டப கோபுரம் அகற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கோபுரம் அகற்றப்படாமல், ராஜகோபுரத்தை மறைப்பதாக உள்ளதால், பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிரகங்களிலேயே செவ்வாய்க்கு தெய்வத்தன்மை அதிகம். சிவனின் அம்சமான வீரபத்திரரே, செவ்வாய் கிரகமாக ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அருள்மிகு தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
கோவை; தாமஸ் வீதி - தெலுங்கு வீதி சந்திப்பில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து ஏழுமலையானுக்கு உகந்த ரோகிணி நட்சத்திரமான இன்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதர் பாம்பன் சுவாமி கோயிலில் மாதந்தோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar