பதிவு செய்த நாள்
05
செப்
2024
07:09
திருப்பூர்; வீடுகளில் சதுர்த்தி விழா கொண்டாட, கண்ணை கவரும் வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியான, வரும் 7ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும், வீடுகளில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வைத்து, பட்சணங்கள் செய்து படைத்து, வழிபடுவது வழக்கம். பெரும்பாலான வீடுகளில், சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு அபிேஷகம் செய்து, பல்வகை பதார்த்தங்களை படைத்து வழிபடுகின்றனர். அதற்காக, மண்ணால் செய்த சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. திருப்பூர் நகரை சுற்றியுள்ள முக்கிய ரோடுகளில், மண்ணால் செய்த சிலைகள், விற்பனைக்கு வந்துள்ளன. சிலைகள், 100 ரூபாயில் துவங்கி, 5,000 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், விநாயகர் அலங்கார பொருட்கள் விற்பனையும், சிறிய சந்தன மாலைகள் விற்பனையும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.