அவிநாசி; அவிநாசி வட்டம், சேவூரிலுள்ள அறம் வளர்த்த நாயகி அம்பிகை உடனமர் வாலீஸ்வரர் கோவிலில் நாளை காலை 7:45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முதல் கால யாக பூஜைகள் துவங்கியது. அதில், யாகசாலை பிரவேசம், பூர்ணாஹீதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமி, பெங்களூரூ ஸ்ரீஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி சிவம் ஆகியோர் முன்னிலையில், சிவாச்சார்யார்களுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது. இன்று இரண்டு மற்றும் மூன்றாம் கால மற்றும் நாளை காலை, நிறைவு கால யாக யாக பூஜைகள் நடைபெறுகிறது.