திண்டுக்கல், திண்டுக்கல் சித்தையன்கோட்டை அருகே புதுப்பட்டி பைரவா சாமி, மல்லையசுவாமி, பெத்தண்ணாசுவாமி, சடையாண்டி சுவாமி, சீலக்காரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் ராமேஸ்வரம், திருச்செந்தூர், திருமலைக்கேணி, அழகர் கோயில் மலை , வைகை உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் மற்றும் முளைப்பாரி அழைப்பு நடந்தது. தொடர்ந்து கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டு யாக வேள்வி பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து மூன்று கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று காலை கடம் புறப்பாடை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை மேட்டுக்கடை டாக்டர் திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தி வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.