பதிவு செய்த நாள்
13
செப்
2024
11:09
தேனி,; தேனி சமதர்மபுரம் கற்பக விநாயகர், சிவ சுப்பிரமணியர், முத்துமாரியம்மன், உண்ணாமுலை அம்பாள், அண்ணாமலையார் கோயில் கும்பாபிஷேகம் செப்., 15ல்நடக்கிறது.
இக்கோயிலில் முத்துமாரியம்மன் சுயம்பு புற்றாக தோன்றி சர்ப்ப வடிவத்தில் காக்கும் தெய்வமானார். சமதர்மபுரம் மக்கள் நீண்டகாலமாக வணங்கி வருகின்றனர். கோயில் நிர்வாகி ஏ.வி.சுப்பிரமணி தலைமையில் புதிதாக கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் எம்.முத்துராம் தலைமையில் ஆகம முறைப்படி கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹா மண்டப திருப்பணிகள் முழுமை பெற்றன. இக் கோயில் செப்.,15 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கோயில் சாஸ்திரப்படி சிற்ப வேலைப்பாடுகள், விக்ரஹங்கள் நிர்மாணிக்கப்பட்டு உள்ளன. 216 கிலோ பஞ்சலோகங்களால் அம்மனின் இருமுகம் பதித்த திரிசூலம் உள்ளது கோயிலின் சிறப்பம்சமாகும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முகூர்த்தகால் நட்டு, விக்னேஸ்வர பூஜை, புண்யாவாகனம், பஞ்சகவ்ய பூஜை, அனுக்ஞை பூஜைகள் நடந்தன.
இன்று முதல் கால பூஜை: இன்று காலை 5:00 மணிக்கு விக்வேஷ்வர பூஜையுடன், அனைத்து கோபுர விமான கலசலங்க் பிரதிஷ்டையும், மாலை முதற்கால யாக பூஜையும், நாளை இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடத்தி செப்., 15 காலை 7:15 மணி முதல் 8:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. அன்னதானம் நடைபெறும். அன்று மாலை உண்ணாமுலை அம்மன் உடனுறை அண்ணாமலையார் திருக்கல்யாண வைபவம், பஞ்சமூர்த்தி திருவீதி உலா நடக்க உள்ளது.ஏற்பாடுகளை கும்பாபிேஷக விழா கமிட்டியினர் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.