திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவல வர உகந்த நேரம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2024 11:09
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., துாரமுள்ள மலையை நடந்து சென்று வழிபடுகின்றனர்.இந்த வகையில் புரட்டாசி மாத பவுர்ணமி திதி, 17ம் தேதி காலை, 11:22 மணி முதல், 18ம் தேதி காலை, 9:10 மணி வரை உள்ளது. இதுவே பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என்று, கோவில் நிர்வாகம் அறித்துள்ளது.