பதிவு செய்த நாள்
15
செப்
2024
11:09
கோவை; ராம் நகர் காளிதாஸ் ரோடு அஷ்ட சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இதில் கும்ப கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானின் அருளை பெற்றனர். முன்னதாக 13ம் தேதி காலை 8 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் | நவக்கிரக ஹோமம் ஆகியன நடைபெற்றது. மாலை 4 - 35 மணி அளவில் வாஸ்து சாந்தி | ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம் | முதல் காலை யாக பூஜை ஆகிய நடந்தன. அதைத் தொடர்ந்து இரவு 08.30 மணி அளவில் தீபாரதனை நடைபெற்றது. இரண்டாம் நாள் 14ம் தேதி காலை 08.30மணி அளவில் விசேஷ சந்தி, இரண்டாம் காலையாக பூஜை, வேத பாராயணம், விசேஷ திரவிய ஹோமம் ஆகியன நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 11 மணியளவில் தீபாரதனை, பூர்ணாஹதி நடைபெற்றது. மாலை 05-30மணி அளவில் மூன்றாம் காலையாக பூஜை, திருமுறை பாராயணம், பிரம்மச்சாரி பூஜை, கன்னிகா பூஜை, ஆகியன நடைபெற்றது. இரவு 08.30 மணி அளவில் தீபாரதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரவு 9 மணி அளவில் எந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தனம், மருந்து சாத்துதல் ஆகியன நடைபெற்றது. இன்று காலை 7:30 மணி அளவில் நான்காம் காலையாக பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து ரக்ஷாபந்தனம். நாடி சந்தனம் ஆகியன நடைபெற்றது. காலை 9 15 மணி அளவில் பூரணாகதி நடைபெற்றது. காலை 9:30 மணிக்கு யாத்திரா தானம், கடம் புறப்பாடு ஆகியன நடைபெற்றது. காலை 9:45 மணி அளவில் அஷ்ட சித்தி விநாயகர் விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.