வண்ணாங்குண்டு குச்சிலிய மடத்து மகா முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2024 12:09
பெரியபட்டினம்; பெரியபட்டினம் அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிக்குட்பட்ட குச்சிலிய மடத்து முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோயிலில் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த ஆலமரம் உள்ளது. ஆலமரத்தின் அருகே புதியதாக கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. வாஸ்து பூஜை, கணபதி ஹோமம் நிகழ்ச்சிக்கு பிறகு காப்பு கட்டுதலுடன் யாக வேள்வி நடந்தது. இரண்டாம் கால யாகசாலை பூஜைக்கு பிறகு நேற்று காலை 11:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடந்தது. கோயில் கோபுர விமான கலசத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். மூலவர்கள் விநாயகர், காளியம்மன், மகா முனிஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வண்ணாங்குண்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தாசில்தார் சரவணன், ஆர்.டி.ஓ.ராஜ மனோகரன், சுதாகரன், எம்.சரவணன், எம்.முருகன், பூஜகர் ஆறுமுகம், ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார், சிவகங்கை டெப்டி கலெக்டர் சுரேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குச்சிலியமடத்து மகாமுனீஸ்வரர் கோயில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.