பூட்டி வைக்கப்பட்டிருந்த எட்டியம்மன் கோவில் மீண்டும் திறப்பு; மகிழ்ச்சியுடன் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16செப் 2024 01:09
திருவள்ளூர்; கும்மிடிப்பூண்டி வட்டம், வழுதழும்பேடு கிராமம், எட்டியம்மன் கோவில் கடந்த ஆக., 09ம் தேதி குடமுழுக்கு நடந்து முடிந்த நிலையில் சமூக பிரச்சனை காரணமாக பூட்டி சீல் இடப்பட்டது. இந்நிலையில் கடந்த 12.09. 2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் இன்று 16ம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் . த. பிரபு சங்கர் இ . ஆ.ப, காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், துணை ஆணையர்/ செயல் அலுவலர்/உதவி ஆணையர் (கூ. பொ) திருவள்ளூர், கே. சித்ராதேவி திருவள்ளூர் மாவட்ட திருக்கோவில் செயல் அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்ட ஆய்வாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு கோயில் திறக்கப்பட்டது. ஊர் பொதுமக்கள் அனைவரும் எவ்வித பேதமும் இன்றி, மிகுந்த மகிழ்ச்சியுடன் அம்மனை வழிபாடு செய்தனர்.