பஞ்சந்தாங்கி முத்துமாரியம்மன் கோயிலில் குளுமை பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17செப் 2024 12:09
திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரை ஊராட்சி பஞ்சந்தாங்கியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் குளுமை பொங்கல் விழா நடந்தது. சத்திரிய ஹிந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோயிலில் மூலவருக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. மலர் அலங்காரம் செய்யப்பட்டது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். கோயில் பூஜகர் பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்கினார். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து சத்திரிய நாடார் உறவின்முறை தலைவர் முனியசாமி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஆர்.செல்வராஜ், தண்டல் கணேசன், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.