ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பதிவு செய்த நாள்
17
செப் 2024 12:09
திருப்பூர்; ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று, விமரிசையாக நடந்தது. ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி டிரஸ்ட் சார்பில், திருப்பூர், ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில், ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீராஜமாதங்கி, ஸ்ரீமஹா வாராஹி, ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் மற்றும் ஸ்ரீபைரவர் சன்னதிகள் எழிலான தோற்றத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மஹா சன்னிதானம், ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம், பெங்களூரு ராஜராஜேஸ்வரி கோவில், ஸ்ரீகைலாச ஆஸ்ரம மகாஸமஸ்தான பீடாதிபதி ஸ்ரீஜயேந்திர புரி மஹாசுவாமிகளின் அனுகிரகத்துடன் நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. கடந்த 6ம் தேதி கணபதி ேஹாமத்துடன் கும்பாபிஷேக விழா பூஜைகள் துவங்கின. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, ஆறாம் கால வேள்வி பூஜை நடந்தது. காலை, 7:05 மணிக்கு, விமான கலசங்களுக்கு கும்பாபி ேஷகமும், காலை, 7:20 மணிக்கு, மூலாலய மூர்த்திகள் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மகா அபிேஷகம், தீபாராதனை நடந்தது. வேலுார் மாவட்ட முன்னாள் கலெக்டர் ராஜேந்திரனின் ஆன்மிக ஆலோசனையுடன், சபேச சிவாச்சார்யார் சுவாமிகள் தலைமையிலான குழுவினர், கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ரத்தினகிரி முருகனடிமை சுவாமிகள், சிரவையாதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், வேலுார் கலவை சிவயோகி சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீமஹா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோவில் ஸ்ரீசுவாமிஜி, செஞ்சேரி ஆதீனம் முத்து சிவராமசாமி அடிகளார், அவிநாசி காமாட்சிதாச சுவாமிகள், திருப்பூர் ஸ்ரீசாரதா சத்சங்கம் சுவாமினி ஸ்ரீமஹாத்மானந்த சரஸ்வதி ஆகியோர் பங்கேற்று அருளாசி வழங்கினர். அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், டிரஸ்ட் தலைவர் ஞானகுரு குடும்பத்தினர், ஆடிட்டர் ராமநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வரும், 48 நாட்களுக்கு, மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது.
|
மேலும்
இன்றைய செய்திகள் »
பாலக்காடு; கரிங்கரைப்புள்ளி காடாங்கோடு பகவதி அம்மன் கோவில் பிரதிஷ்டை தின உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
ராமேஸ்வரம்; அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ... மேலும்
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், உலக சாதனை முயற்சியாக, 900க்கும் மேற்பட்ட நாட்டிய ... மேலும்
கூடலுார்; கூடலுார் கூடலழகிய பெருமாள் கோயிலில் கூடாரவல்லி திருவிழா வெகு விமர்சையாக ... மேலும்
பழநி; பழநி முருகன் கோயிலுக்கு வரும் பாதயாத்திரை சாரல் மலையில் சாலைகளில் பாதுகாப்புக்கு இன்றி ... மேலும்
|