பதிவு செய்த நாள்
18
செப்
2024
12:09
கோவை; புரட்டாசி மாதபிறப்பு மற்றும் பவுர்ணமியையொட்டி, கோவை பெரியகடை வீதியிலுள்ள லட்சுமிநாராயண வேணுகோபாலசுவாமி கோவிலில், பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
புண்ணியம் நிறைந்தது புரட்டாசி மாதம் என்று, கிருஷ்ணாவதாரத்தில் மஹாவிஷ்ணு அருளியுள்ளார். அதனால் பெருமாளுக்கு உகந்த மாதமாக, அவரை வழிபடுவதற்கு உரிய மாதமாக, புரட்டாசி போற்றப்படுகிறது. அதனாலேயே புரட்டாசியில் திருப்பதி உள்ளிட்ட பெரும்பாலான பெருமாள் கோவில்களில், பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அனைத்து தெய்வங்களும் பெருமாளை வழிபட, ஒன்று திரள்வதாக நம்பிக்கை. அதனால் புரட்டாசி சனிக்கிழமையில், பெருமாளை வழிபட்டால் சிரமங்களிலிருந்து விடுபடலாம். புரட்டாசி மாத அமாவாசையில் விரதமிருந்து, முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதையும், சனிக்கிழமை தோறும் வழிபாடு செய்வதையும், பக்தர்கள் பின்பற்றுகின்றனர். புரட்டாசி மாத பிறப்பையொட்டி, கோவை பெரியகடைவீதியிலுள்ள லட்சுமிநாராயண வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று சுவாமிக்கு அதிகாலை திருமஞ்சனம், சேவாகாலம், பாராயணம் நடந்தது. தொடர்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். திரளானபக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.