வில்லியனுாரில் பழமைவாய்ந்த திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இதனை சுற்றி ஆறு சிவாலயங்கள், 18 சித்தர்களின் ஜீவ சமாதி உள்ளன. திருவண்ணாமலை கிரிவலம் போன்று, பவுர்ணமிதோறும் திருக்காமீஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் ஆன்மிக நடைபயணம் செல்கின்றனர். அதன்படி நேற்று 32வது மாத ஆன்மிக நடைபயணத்தை முன்னிட்டு மாலை 6:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் துவங்கிய ஆன்மிக நடையணம் மாட வீதிகள் வழியாக மூலக்கடை, சுல்தான்பேட்டை, வி.மணவெளி, ஒதியம்பட்டு, திருக்காஞ்சி, உறுவையாறு, ஆச்சார்யாபுரம், கோட்டைமேடு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர். புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதியை சேர்ந்தபக்தர்கள், சிவனடியார்கள், சிவாச்சார்யர்கள் திரளாக பங்கேற்றனர்.