Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ...  வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் பஞ்சமி யாக பூஜை வரசித்தி வாராஹி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தின் உழவாரப்பணி
எழுத்தின் அளவு:
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தின் உழவாரப்பணி

பதிவு செய்த நாள்

22 செப்
2024
11:09

அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டத்தின் 500 வது மாத உழவாரப்பணி மற்றும் சிவாலய வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் முன்பு உள்ள ஸ்ரீ வியாசராஜரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. இந்தக் கோவில் சிதலமடைந்து இருந்த நிலையில் விஜயமங்கலம் கொங்கு மண்டல அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக் கூட்டத்தின் அப்பரடி பொடி புலவர் சொக்கலிங்கம் வழிகாட்டுதல் படி தொடர்ந்து உழவர் பணிகள் நடைபெற்றது. இதனால் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில் வெகு விரைவாக புனரமைப்புகள் மற்றும் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கொங்கு மண்டலம் அப்பரடிகள் சிவநெறி வழிபாட்டு திருக்கூட்டம் 1981ம் ஆண்டு விஜயமங்கலம் கோவர்த்தனாம்பிகை உடனமர் ஸ்ரீ நாகேஸ்வரர் பெருமான் கோவிலில் முதல் உழவாரப்பணிகள் தொடங்கப்பெற்றது. தற்போது 500வது மாத உழவாரப்பணி விழாவை நடத்தும் அப்பரடி பொடி புலவர் சொக்கலிங்கம் முன்னிலையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உழவாரப் பணிகள் நேற்று காலை 8:00 மணி முதல் 12 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து அவிநாசி அடுத்த ஆட்டையாம்பாளையத்தில் உள்ள செந்தூர் மஹாலில் சிவாலய வழிபாடு மற்றும் சிவனடியார்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மதியம் ஒரு மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்,செந்தூர் மஹால் மாரப்பகவுண்டர், ஓதியப்பன் ஆகியோர் விநாயகர் வழிபாடு,விடை கொடியேற்றுதல், கொடி காவி ஓதுதல் ஆகியவற்றை துவக்கி வைத்தனர். அப்பரடி பொடி புலவர் சொக்கலிங்கம் நிகழ்ச்சிக்கான வரவேற்புரை வழங்கினார். பவானி நம்பியாரூரன் வேலுச்சாமி விழா அறிக்கை வாசித்தார்.

விழாவில் 1981 முதல் உழவாரப்பணிகள் புரிந்த 500 சிவாலயங்களில் பட்டியல் நூல், 1984ல் நடைபெற்ற வடபுல திருத்தல பயண நூல் மற்றும் 1985ல் நடைபெற்ற தில்லை திருநடைப் பயண நூல் ஆகியவற்றை குரு மகா சந்நிதானங்கள் பேரூர் ஆதீனம் சாந்தலிங்கம் மருதாசல அடிகளார் தலைமையில்,கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர ஸ்வாமிகள் ஆசியுரையுடன் கூனம்பட்டி மாணிக்கவாசகர் மடாலயம் நடராஜர் ஸ்வாமிகள் ஆகியோர் வெளியிட்டனர். இந்நிகழ்ச்சிக்கான வாழ்த்துரையை சைவ சித்தாந்த ஞான பானு சென்னியப்பனார், சம்பந்த சரணாலயர் பழனி முத்துசாமி, நம்பி ஆரூரர் சென்னை முருகேசன் ஆகியோர் வழங்கினர். மாணிக்கவாசகர் அருட்பணி மன்ற அறக்கட்டளை பேரூர் குமரலிங்கம் சிவனடியார், திருநணா திருக்கூட்ட அறக்கட்டளை தியாகராஜன், சிவசண்முகம் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினர். "ஞானபாரதி அனந்தகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இதில் தமிழகத்திலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட சிவனடியார் கூட்டத்தினர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, ஆர். எஸ். புரம் அன்னபூர்னேஸ்வரி கோவிலில் நாக பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar