பதிவு செய்த நாள்
21
நவ
2012
11:11
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது. குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா, கடந்த 13ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு, வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. கடந்த 18ம் தேதி இரவு காலை கந்த சஷ்டி, பல்லக்கு, தீர்த்தவாரி நடந்தது. இரவு சூர
சம்ஹாரம் நடந்தது. விழாவில், நேற்றுமுன்தினம் இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்துடன் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, கந்தபுராணம் அரங்கேற்றம் நடந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அதன்பின் ஹோமங்கள் நடந்தன. இரவு 8:45 மணிக்கு, மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, தெய்வயானையம்மையார் திருக்கல்யாணம் நடந்தது.பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். அதன்பின் சுவாமி வள்ளி தெய்வானையுடன், யானை வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜவீதிகளை வலம் வரும், வீதி உலா நடந்தது. வழிநெடுகிலும் பொதுமக்கள் சுவாமியை வழிபட்டனர்.