திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்து முடிந்த கந்தசஷ்டி திருவிழாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.17 லட்சம் கூடுதல் வருவாய் கிடைத்து உள்ளது.முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யவும் தங்குவதற்கு வேண்டிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழா 7 நாட்களிலும் கட்டண தரிசனம் மூலம் வசூலான தொகை 33 லட்சத்து 53 ஆயிரத்து 520 ரூபாய் வசூலானது. இந்த ஆண்டு 50 லட்சத்து 38 ஆயிரத்து 670 ரூபாய் வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 16 லட்சத்து 85 ஆயிரத்து 150 ரூபாய் அதிகம் வருவாய் கிடைத்து உள்ளது. கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற முழுஒத்துழைப்பு கொடுத்த அறநிலைய ஆட்சித்துறை அமைச்சர் ஆனந்தன், துறை ஆணையர் தனபால் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், போலீஸ் இலாகா, கோவில் வளர்ச்சிக்கு நன்கொடை அளித்த உபயதாரர்கள், சஷ்டி திருநாளில் அன்னதானம் வழங்கியவர்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு தக்கார் கோட்டை மணிகண்டன் கூறினார்