பதிவு செய்த நாள்
28
செப்
2024
12:09
பிரகாரத்தை வலம் வந்து, கொடிமருந்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த முறையில் வணங்கினால் பெருமாள் கோவிலில் வணங்கிவிட்ட முழுபலன் கிடைக்கும். கோவில் உட்கார்ந்து விட்டு வருவது. கோவிலுக்குச் சென்று வணங்கியபிறகு தானம் செய்வது இதற் கெல்லாம் கணக்கே கிடையாது. இறைவனின் அருள் என்பது நமது ஆன்மாவிற்கு அருளுவது. அது மற்ற விஷயங்கள் செய்வதால் நம்மை விட்டு போய்விடாது பெருமாள் கோவிலுக்கு செல்பவர்கள், பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயரையும் வணங்கினால் கின்றனர். குறிப்பாக திருப்பதி கோவிலில் ஏழுமலை யான தரிசிக்க செல்பவர்கள், எப்போதுடா பெருமாளை தரிசிப்போம் என்ற நினைப்பில், அவருக்கு எதிரில் இருக்கும் கருடாழ்வரை பார்க்காமலேயே, நேராக பெருமாளை வணங்கிவிட்டுச்செல்கின்றனர். ஆனால், வைணவ ஆகம் விதிகளின்படி, முதலில் மூலவரை வணங்குவதற்கு முன்பாக முதலில் கருடனைத்தான் பணித்து வணங்க வேண்டும். காரணம், கருடன் தான் பெருமாளின் வாகனம், கருடன் ஆசிர்வதித்தால் மட்டுமே பெருமாளின் ஆசீர்வாதமும் நமக்கு முழுமையாக கிடைக்கும்.