நாம் கையில் வாங்கும்வரை அது புனிதமான தீர்த்தம். ஆனால், வாங்கி குடித்த பிறகு அது எச்சில் தண்ணீர் ஆகி விடுகிறது. இதை தமது தலையில் தடவிக்கொண்ட பிறகு, ஜடாரி வாங்குவது நமக்கு புண்ணியத்திற்கு பிறகு பாவத்தையே சேர்க்கும். ஐடாரி என்பது பெருமாளின் திருவடியாகும். எச்சில் தண்ணீர் தடவிய நமது தலையில் மீது பெருமாளின் திருவடி படுவது நமக்கு பாவத்தை மட்டுமே கொண்டு சேர்க்கும். இறைவனின் திருவடி நமது சிரசின்மீது பட்டால்தான் நமது அஞ்ஞானம் மறைந்து ஞானம் பிறக்கும். அதனால் தீர்த்தத்தை வாங்கிக் குடித்த பிறகு, புடவை முந்தானையிலோ அல்லது ஏதாவது துணியிலோ துடைத்துக் கொள்ள லாம். ஜடாரி வாங்கும்போது, மிகவும் பணிவுடன், தார பெருமாளை நினைந்து வேண்டிக்கொண்டு வாங்க வேண்டும்.