Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ... திருப்பதி கோயிலில் பாரம்பரிய தூய்மை பணி; கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி கோயிலில் பாரம்பரிய தூய்மை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எண்ணியது ஈடேற ஹனுமந்தனுக்கு அரிசி காணிக்கை செலுத்தும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
எண்ணியது ஈடேற ஹனுமந்தனுக்கு அரிசி காணிக்கை செலுத்தும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

01 அக்
2024
11:10

கர்நாடகாவின் தென் மாவட்டங்களில், பெங்களூரு நகரம் எப்படி பிரபலமோ, அது போன்று வட மாவட்டங்களில் தார்வாட் நகரமும் பிரபலம். முக்கிய நகரமாக விளங்குவதால் பல்வேறு விஷயங்களுக்கு பிரதான நகரமாக திகழ்கிறது. இந்த வகையில், தார்வாடில் உள்ள நுக்கிகேரி ஹமனுந்தா கோவில், மிகவும் பிரபலம். சிறிய மலை குன்றின் மீது, நுக்கிகெரே ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. தார்வாடில் உள்ள புராதன கோவிலில் முக்கியமானது.


நீர் நிலைகள்; மன்னர் காலத்தில், போர் நடந்தபோது, எதிரிகளிடம் இருந்து விக்ரஹங்களை பாதுகாக்கும் வகையில், நீர்நிலைகளில் வைக்கப்பட்டன. அது போன்று, ஹனுமந்தன் விக்ரஹம், நுக்கிகெரே ஏரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. விஜயநகர சாம்ராஜ்யத்தின் பேரரசரான கிருஷ்ணதேவராயரின் ஆஸ்தான குருக்களான வியாசராஜ தீர்த்தர், ஹனுமந்தனை கண்டுபிடித்து, 15ம் நுாற்றாண்டில் மீண்டும் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு கூறுகிறது. அதன் பின், பேஸ்வராஜர் ஆட்சிக் காலத்தில், தார்வாட் தேசாய் குடும்பத்தினருக்கு, ஹனுமந்தன் கிடைத்துள்ளார். அப்போது முதல், இப்போது வரை தேசாய் குடும்பத்தினரால் கோவில் நிர்வகிக்கப்படுகிறது. மழைக் காலத்தில் குன்றின் மீதிருந்து, நீர்வடிந்து, நுக்கிகெரே என்ற ஏரி உருவாகி உள்ளது. காலப்போக்கில், நுக்கிகேரி என்று மாறியது. கன்னடத்தில் ‘நுக்கி’ என்றால் புகுந்து என்றும், ‘கெரே’ என்றால், ஏரி என்றும் பொருள்படும்.


பளிச் கண்கள்; ஒரே கல்லில் ஹனுமந்தனை செதுக்கி உள்ளனர். இந்த விக்ரஹம், நான்கரை அடி உயரம் கொண்டது. 2 கண்களும் ‘பளிச்’ என்று இருப்பதை பக்தர்கள் காணலாம். உருவத்தை பார்த்தவர்களை, மீண்டும், மீண்டும் தன்னகத்தே ஈர்க்கிறது. சுவாமியை பக்தி பரவசத்துடன் கும்பிட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்று அப்பகுதி பக்தர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஏராளமான பக்தர்கள் வருவதுண்டு. விசேஷ நாட்களில் கூட்டம் அலை மோதும். சித்ரா பவுர்ணமியன்று மஹா ரத உற்சவம் நடப்பது மிகவும் பிரபலம். கர்நாடகா மட்டுமின்றி, மஹாராஷ்டிராவில் இருந்தும் பக்தர்கள் வருவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், வெளியே அமைந்துள்ள தொட்டியில் இருந்து வரும் தண்ணீரால், கை, கால்களை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அருகில் உள்ள ஒரு கல் மீது, தேங்காய் உடைத்துக் கொண்டு, சுவாமியை தரிசிக்கச் செல்ல வேண்டும். நினைத்த காரியங்கள் நிறைவேறுவதற்கு, சுவாமிக்கு அரிசியை காணிக்கையாக செலுத்தும் வழக்கம் உள்ளது. 1 கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு பாக்கெட்டில் விற்கப்படுகிறது.


ஈர்ப்பு; ஆண், பெண் இரு பாலரும் தனி தனி வரிசையில் நிற்க வேண்டும். சுவாமி அருகில் சென்ற உடன், நம்மை அறியாமலேயே ஒரு வித உணர்வு உணர முடிகிறது. சுவாமியை பார்த்து கொண்டு, அங்கேயே இருந்து விடலாமா என்று தோன்றும். உடல் முழுதும் புல்லரிக்கும். கோவில் பிரகாரத்தை சுற்றி வரும் போதும், பின் பகுதியில் நுக்கிகெரே ஏரியை காணலாம். அதில், பூத்து குலுங்கும் அல்லி மலரை பார்த்து மகிழலாம். கோவிலில் இருந்து வெளியே வந்த உடன், பல விளக்குகள் கொண்ட கோபுரத்தை காணலாம். அதில் எண்ணெய், நெய் ஊற்றி வழிபடலாம். வெளியே நவகிரஹங்களையும் தரிசனம் செய்யலாம். இந்த கோவிலில் இருந்து, நடந்து செல்லும் துாரத்தில், சீதா – ராமர் கோவிலையும் தரிசிக்கலாம். இங்கு, சிருங்கேரி சாரதாம்பாள், சங்கராச்சாரியார், சிவன், விநாயகர், அன்னபூர்னேஸ்வரி, சரஸ்வதி, துர்கா, சந்தோஷமிதா, வேணுகோபால சுவாமி, ஜகன்நாத் ஆகிய சுவாமிகளையும் தரிசனம் செய்யும் பாக்கியம் பெறலாம்.


போக்குவரத்து வசதி; தார்வாட் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ., துாரத்திலும்; ஹுப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து 20 கி.மீ., துாரத்திலும் நுக்கிகேரி ஹனுமந்தா கோவில் அமைந்துள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து, ஆட்டோ, டாக்சியில் வரலாம். ஹுப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து டாக்சியில் வரலாம். – நமது நிருபர் –


கோவில் நேரம்; தினமும் காலை 6:00 மணியில் இருந்து, இரவு 7:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து கோவில் திறந்திருக்கும். சிறப்பு தரிசனம் கிடையாது. அனைவருக்கும் இலவச தரிசனம் தான்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர். இவருக்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட சொந்தவீடு அமையும். இவரை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி ; திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக கன்னியாகுமரி பத்மநாபபுரம் ... மேலும்
 
temple news
கோவை ; கோவை, நேரு ஸ்டேடியம் ஆடிஸ்வீதி தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழா அக்., 3ல் ஆனந்தவல்லி ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில் நவராத்திரியை பெருவிழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் பத்து நாள் விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar