நவபாஷாணத்தில் புரட்டாசி மகாளய அமாவாசை ஏராளமான பக்தர்கள் நீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2024 03:10
தேவிபட்டினம்; தேவிபட்டினம் நவபாஷாணத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு திருமண தடை, ஏவல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்வதற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆடி, தை அமாவாசை தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினத்தில், தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏராளமான பக்தர்கள் கடலில் நீராடி, நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். நீராட வந்த பக்தர்களுக்கு இந்து அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பாரதி, இராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் நாராயணி, எழுத்தர் தங்கவேல் பாண்டியன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.