பதிவு செய்த நாள்
03
அக்
2024
11:10
மேல்மருவத்துார்; மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு, நவராத்திரி விழாவையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
ஆதிபராசக்தி அம்மனுக்கு, லட்சுமி பங்காரு அடிகளார் தீபாராதனை காட்டி, கருவறையில் நவராத்திரி அகண்ட தீபத்தை ஏற்றிவைத்து, நவராத்திரி விழாவை துவக்கி வைத்தார். அதன்பின், அகண்ட தீபத்தை மூன்று பெண்கள் கையில் ஏந்தியடி, சித்தர் பீடத்தை வலம் வந்தனர். நீண்ட வரிசையில் வந்த செவ்வாடை பக்தர்கள் மற்றும் பக்தர்கள், அகண்ட தீபத்தில் எண்ணெய் ஊற்றி வழிபாடு செய்து, அம்மனை வழிபட்டனர். நவராத்திரி விழா, நேற்று துவங்கி வரும் 12ம் தேதி வரை, 11 நாட்கள் நடைபெறும். அந்நாட்களில், ஆதிபராசக்தி அம்மனுக்கு, தினமும் சிறப்பு அலங்காரம், காப்புகள் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெறும். புரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, உலக நன்மைக்காக, வேள்வி பூஜையைலட்சுமி பங்காருஅடிகளார் துவக்கிவைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவர்கள் செந்தில் குமார், ஸ்ரீதேவி ரமேஷ் மற்றும் சென்னை சக்திபீடங்கள்செய்திருந்தனர்.