பதிவு செய்த நாள்
03
அக்
2024
11:10
திருப்பூர்; திருப்பூர்-ஸ்ரீபுரம், அவிநாசி அருகே ராக்கியாபாளையம், ஐஸ்வர்யா கார்டனில் உள்ள ஜகன்மாதா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில், நவராத்திரி விழா இன்று துவங்கியது.
ஜகன்மாதா ஸ்ரீராஜ ராஜேஸ்வரி அம்பாள், ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலில், நாளை (இன்று) முதல், 12ம் தேதி வரை நவராத்திரி விழாவினை சிறப்பாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது மண்ட பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நவராத்திரி நாட்களில், தினந்தோறும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், பக்தர்கள் பங்கேற்கும் குங்கும அர்ச்சனை வழிபாடும், உபசார தீபாராதனையும் சிறப்புடன் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ள அன்பர்கள் தங்கள் பெயரினை கோவில் அலுவலகத்தில் முன்பதிவு செய்துகொண்டு, உரிய பூஜை நேரத்தில் பங்கேற்கலாம்.