பதிவு செய்த நாள்
04
அக்
2024
05:10
செஞ்சி; மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது. அதனையொட்டி நேற்று மாலை 6:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. உற்சவர் அங்காளம்மனுக்கு இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரண்டாம் நாள் விழாவாக இன்று லலிதாம்பிகை அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். நாளை 3ம் நாள் விழாவில் விஷ்ணு துர்க்கை, நாளை மறுநாள் 4ம் நாள் தனலட்சுமி, 5ம் நாள் காயத்ரிதேவி, 6ம் நாள் விசாலாட்சி, 7ம் நாள் அபிராமி, 8ம் நாள் மகிஷாசூரமர்த்தினி, 9ம் நாள் சரஸ்வதி, 10ம் நாள் விஜய சாமுண்டீஸ்வரி அலங்காரத்திலும் அருள்பாலிக்க உள்ளார். முதல் நாள் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத் தலைவர் மதியழகன், அறங்காவலர்கள் சுரேஷ், ஏழுமலை, பச்சையப்பன், வடிவேல், சரவணன், சந்தானம் மற்றும் கோவில் பணியாளர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.