பதிவு செய்த நாள்
10
அக்
2024
11:10
திருப்பதி: திருமலை பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான இன்று (செப்.,10)காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆந்திர மாநிலம், திருமலை ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவம், கருட கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் ஆறாம் நாளான நேற்று (செப்.,09) மாலை தங்கத்தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலையில் அனுமன் வாகனத்தில் மலையப்பசுவாமி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ஏழாவது நாளான இன்று காலை மலையப்பசாமி சூரிய பிரபை வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சூரிய பிரபை வாகனத்தில் இறைவனை தரிசித்தால், செல்வச் செழிப்பு, நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்கள் குழுக்கள், பஜனை, கோலங்கள், மங்கள வாத்தியங்களுக்கு நடுவே இறைவனின் வாகனசேவை கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா.. கோபாலா கோஷத்துடன் வழிபாடு செய்தனர். இரவு 7 மணி சந்திர பிரபை வாகனத்தில் வலம் வருகிறார். 11ம் தேதி காலை 7 மணி தேரோட்டம், இரவு 7 மணி குதிரை வாகனம். 12ம் தேதி காலை 6 மணி சக்ர ஸ்நானம், இரவு 8:30 மணி கொடியிறக்கம் நடைபெற உள்ளது.