கமுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய புரட்டாசி மாத பஜனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 02:10
கமுதி; கமுதியில் உள்ள ராமானுஜ பஜனை மடத்தின் சார்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரிய முறைப்படி புரட்டாசி மாத பஜனை நடைபெற்று வருகிறது.
கமுதி ராமானுஜ பஜனை மடத்தில் குழுவின் சார்பில் புரட்டாசி மாதத்தில் மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வைத்து பெருமாள் பாடல்கள் பாடி ஊர்வலமாக சென்று வழிபட்டு வருகின்றனர் .பஜனை மடத்தில் தொடங்கி காமாட்சி அம்மன், காளியம்மன்,விநாயகர்,பெருமாள், முருகன்,ஆஞ்சநேயர்,மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்துமாரியம்மன், உச்சிமாகாளியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பஜனை பாடல்கள் பாடி வருகின்றனர். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்கள் பெறப்பட்டு புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை ராமானுஜர் மடத்தில் சிறப்புபூஜை நடைபெறும். அதில் பொதுமக்களிடம் பெறப்பட்டுள்ள அரிசி உட்பட பொருட்களை வைத்து அன்னதானம் வழங்கப்படும். கமுதியில் ராமானுஜ பஜனை மடத்தின் சார்பில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகவே நடைபெற்று வருகிறது என்று பஜனை குழுவினர் தெரிவித்தனர்.கௌர செட்டியார் உறவின்முறை டிரஸ்டி ஸ்ரீமன் தலைமையில் ராமானுஜ பஜனை குழு மற்றும் கௌரவ இளைஞர்கள் பலரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.