நாகப்பட்டினம்: திருவாவடுதுறை ஆதீனம் சிவபிரகாச தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் (62) உடல் நல குறைவால் அதிகாலை 2 மணியளவில் மரணம் அடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நல குறைவு காரணமாக சென்னை கும்பகோணம் ஆகிய இடங்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலையில் மரணமடைந்தார். கடந்த 1981-ம் ஆண்டு மடத்தின் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றார். 83-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக திருவாவடுதுறை ஆதீன மடத்தின் தலைமைப்பதவி வகித்து வந்தார். இவர் மடத்தின் சார்பில் சைவசித்தாந்த பயிற்சி மையத்தை ஆரம்பித்து சிங்கப்பூர் மலேசியா உட்பட பல்வேறு நாடுகளில் சைவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.மடத்தி்ன் கீழ் செயல்பட்டு வரும் 20 பெரிய கோவில்கள் மற்றும் 50 சிறிய கோவில்களை நிர்வகித்து வந்தார். இவர் 550க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் கடந்த 2002-ம் ஆண்டு மடத்தின் இளைய ஆதீனமாக காசிவிஸ்வநாத பண்டார சுவாமிகள் நியமி்க்கப்பட்டார். அவர் மீது கொலை வழக்கு சுமற்றப்பட்டதையடுத்து மடத்திற்கான இளைய ஆதீன பதவி நிரப்பப்படாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது