புரட்டாசி நான்காம் சனிக்கிழமை; பெரியகுளம் கோயிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 05:10
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை நான்காம் வார்த்தை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜை துவங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மூலவர் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன், திருப்பதி வெங்கடாசலபதி அலங்காரத்திலும், உற்ஸவர் கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நான்காம் வாரம் என்பதால் பெருத்தேவி தாயார் கஜலட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் வெண்ணெய் காப்பு சாத்திய ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் தென்கரை நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை மலர் அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வடகரை கோதண்டராமர் கோயிலில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சுவாமி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர்.