திருப்புவனம் மணிகன்னிகை தீர்த்தம் புனரமைப்பு, பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2024 05:10
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் மணிகன்னிகை தீர்த்தம் புணரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்ததையடுத்து பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். புஷ்பவனேஷ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள மணி கன்னிகை தீர்த்தத்தில் இருந்து நீர் எடுத்து அம்மனுக்கும் புஷ்பவனேஷ்வரருக்கும் தினசரி அபிஷேகம் செய்வது வழக்கம். பல ஆண்டுகளாக தீர்த்தம் பயன்பாடின்றி கிடந்ததை அடுத்து ஸ்ரீ வேலப்பர் தேசிகர் கூட்டம் தீர்த்த கிணற்றை தூர் வாரி சுத்தம் செய்ததையடுத்து மணிகன்னிகை தீர்த்தத்திற்கு சிறப்பு பூஜை செந்தில் பட்டர் தலைமையில் நடந்தது. சிறப்பு பூஜைக்கு பின் தீர்த்தம் எடுத்து அம்மனுக்கும், சுவாமிக்கும் அபிஷேகம் நடந்தது. நீண்ட வருடங்களுக்கு பின் மணிகன்னிகை தீர்த்தம் பயன்பாட்டிற்கு வந்தது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.