செங்கல்பட்டு; செங்கல்பட்டில் தசரா விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. சின்னக்கடை, பூக்கடை, ஜவுளிக்கடை, சின்னம்மன்கோவில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட பகுதிகளில், அம்மன் சுவாமிகள் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். இதில், 9ம் நாள் விழாவில், கோவில்களில் சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன், பக்தர்களுக்கு அருள்புரிந்தார். 10ம் நாள் விஜயதசமியையொட்டி, மகிஷாசூரமர்த்தினி அம்மன் உட்பட, 15 க்கும் மேற்பட்ட அம்மன் சிலைகள் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் இரவு வீதியுலா சென்றன. இதைத் தொடர்ந்து, அறிஞர் அண்ணா நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில், சூரசமஹாரத்தின் போது, வன்னி மரத்தில் அம்பு எய்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது.