பல்லடம் அடுத்த, சித்தம்பலம் எஸ்.ஏ.பி., சேரன் மாநகர் செல்ல விநாயகர் கோவில் முதலாம் ஆண்டு விழா, அக்., 11 அன்று துவங்கியது. அன்று காலை, 6.30 மணிக்கு கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மறுநாள், ஆண்டு விழாவை முன்னிட்டு, இசை நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் குழந்தைகள், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. அக்., 13 அன்று பம்பை வாத்தியங்களுடன் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, திருவிளக்கு வழிபாடு, விநாயகர் பூஜை, மகா கணபதி, சுதர்சனர் மற்றும் மகாலட்சுமி, தன்வந்திரி ஹோமம் மற்றும் நவகிரக பூஜை உள்ளிட்டவை நடந்தன. நேற்று முன்தினம், காலை, 11.00 மணிக்கு, மகா அஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் செல்ல விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழாக்குழுவின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.