தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் 108 பொங்கல் வைத்து வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2024 10:10
கூடலுார்; கூடலுார் தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயிலில் 108 பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
கூடலுார் தாமரைக்குளம் செல்லும் ரோட்டில் 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான ஈஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயில் பராமரிப்பின்றி சேதமடைந்து அழியும் நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். கோயில் வளாகத்தில் விநாயகர், சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் புதிதாக வைத்து பீடம் அமைத்து தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர். மூலஸ்தானத்தில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன் சிலைகள் பிரதிஷ்டம் செய்து 48 நாள் மண்டல காலம் முடிவடைந்த நிலையில் நேற்று கோயில் வளாகத்தில் 108 பொங்கல் வைத்தனர். பொங்கல் வைப்பதற்காக முன்னாள் நகராட்சித் தலைவர் சின்னமாயன் 108 பொங்கல் பானைகளை இலவசமாக வழங்கினார். தெப்பத்தில் 7 கன்னிமார்கள் தண்ணீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தாமரைக்குளம் ஈஸ்வரன் கோயில் பாதுகாப்பு மற்றும் புனரைமைப்புக்குழு செய்திருந்தது.