Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் ... பாளை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விமான பாலாலயம் பாளை மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவில்களில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

22 அக்
2024
10:10

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதி, பேருந்து நிலையம்அருகில், நகரீஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ள கோவில்கள் பல்வேறு திருப்பணிகளுடன் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி, காலை 9:30 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று, அதிகாலை 4:50 மணிக்கு கலச புறப்பாடும், 5:00 மணிக்கு விமானத்திற்கும், 5:25 மணிக்கு மூலஸ்தானம் மற்றும் பரிவாரங்களுக்கும் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. காலை 9:00 மணிக்கு மஹா அபிஷேகம் நடந்தது.


அழிசூர் திரவுபதியம்மன்; உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. சிறிய அளவில் இருந்த இக்கோவிலை சற்று பெரிய அளவில் கட்ட கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, பல்வேறு திருப்பணிகளுடன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 18ம் தேதி காலை 8:00 மணிக்கு புதிய சிலைகளுக்கும், விமான கலசங்களுக்கும் கரிகோலம் நடந்தது. நேற்று, காலை 10:00 மணிக்கு விமான கோபுர கலசத்திற்கும், தொடர்ந்து திரவுபதியம்மனுக்கும் புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு திரவுபதியம்மன் திருக்கல்யாண உற்சவமும், திருவீதியுலாவும் நடந்தது.


ஊத்துக்காடு மாரியம்மன்; ஊத்துக்காடு மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் செலவில், புதிதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, 14ம் தேதி பந்தகால் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று, காலை 8:30 மணிக்கு கலசப் புறப்பாடு நடந்தது. அதை தொடர்ந்து, காலை 9:30 மணி அளவில் கோவில் கோபுர கலசத்தின் மீது, சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தினர். பிற்பகல், 12:00 மணிக்கு மூலவர் மாரியம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar