Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாயல்குடி அங்காள ஈஸ்வரி அம்மன் ... சங்கராபுரம் சவுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் சங்கராபுரம் சவுந்தர்ராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் மூலநாதர் கோவில் உறுதி தன்மை கேள்விக்குறி; பக்தர்கள் அதிருப்தி
எழுத்தின் அளவு:
பாகூர் மூலநாதர் கோவில் உறுதி தன்மை கேள்விக்குறி; பக்தர்கள் அதிருப்தி

பதிவு செய்த நாள்

22 அக்
2024
04:10

பாகூர்; பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், நடராஜர் மண்டபத்தின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதால், அதன் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.


பாகூரில் 1400 ஆண்டுகள் பழமையான  வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் முறையாக பராமரிக்காமல் சேதமடைந்து வந்தது. இக்கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்திட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2014 ஆண்டு புனரமைப்பு பணிகள் துவங்கப்பட்டு, 2017ம் ஆண்டு கும்பாபி ேஷகம் செய்யப்பட்டது. புனரமைப்பு பணிகள் சரிவர செய்யப்படாத நிலையில், கோவிலுக்குள் தேங்கும் மழை நீரால், தரையில் பாசி பிடிப்பதால், கோவிலை வலம் வரும் பக்தர்கள் வழுக்கி விழுகின்றனர். மூலவர் மண்டபம், அர்த்த மண்டபத்தில் மேல் தளம் மற்றும் சுவர்களில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அதன் வழியாக மழை நீர் கசிந்து வருகிறது. குறிப்பாக, நடராஜர் மண்டபம் மற்றும் அதனையொட்டி வெளிப்புறமாக அமைந்துள்ள கடைகளின் மேல் தளம், பக்கவாட்டு சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டு வலுவிழந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும், அதன் உள்ளே வைத்துள்ள பழமை வாய்ந்த சிலைகள், வீதியுலா வாகனங்களும் சேதமாகும் நிலை உள்ளது. நடராஜர் மண்டபத்தின் உள்ளேயும், வெளியே உள்ள கடைகளிலும் இரும்பு பைப்புகள் கொண்டு மேல் தளத்தை முட்டு கொடுத்து வைத்துள்ளனர். தஞ்சை பெரிய கோவிலை விட பழமை வாய்ந்த இக்கோவிலை தொல்லியல் துறை உயர் அதிகாரிகள், எட்டிக்கூட பார்ப்பது கிடையாது என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுச்சேரி அரசால் இக்கோவிலில் எவ்வித பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. எனவே, மத்திய தொல்லியல் துறை,  பாகூர் மூலநாதர் கோவிலை, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar