Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரம்பரிய நெற்கதிர் அறுவடை ... காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உண்டியல் வருவாய் ரூ.35 லட்சம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!; தேவஸ்தானம் அட்வைஸ்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!; தேவஸ்தானம் அட்வைஸ்

பதிவு செய்த நாள்

26 அக்
2024
02:10

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஸ்ரீவாரி மெட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. 


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். சாலை மார்க்கமாக வந்து செல்லும் பக்தர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி மலைபாதைகள் வழியாக வந்து செல்கின்றனர். இந் நிலையில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் அறிவுரைகளை தேவஸ்தானம் அறிவிப்பாக வெளியிட்டு உள்ளது. அதில் உள்ள விவரங்கள் வருமாறு; 


* 60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா,வலிப்பு, மூட்டுவலி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம்.

* உடல்பருமன், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலை ஏறுவதை முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.

திருப்பதி தேவஸ்தானம் கடல் மட்டத்தில் இருந்து அதிக உயரத்தில் உள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும். எனவே, இதய நோய், ஆஸ்துமா தொந்தரவு உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம்.


* நீண்டநாட்களாக மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள், பயணத்தின் போது தேவையான மருந்துகளை கைவசம் எடுத்துச் செல்வது நலம்.

* ஏதேனும் அவசர மருத்துவ சிகிச்சை வேண்டுவோர், கோயில் செல்லும் மலைப்பாதையில் 1500வது படிக்கட்டு, கலிகோபுரம் மற்றும் பாஸ்கர்ல சந்நிதி இடங்களில் தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவக் குழுக்களை அணுகலாம்.


* திருமலையில் உள்ள மருத்துவமனையில் 24 மணிநேரமும் உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

* நீரிழிவு நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைகள், கிட்னி தொடர்பான தொந்தரவுகளுக்கு சிகிச்சைகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar