Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்மத்தை கடைப்பிடித்தால் ... ரிஷ்ய சிருங்கரால் உருவான சிருங்ககிரி ரிஷ்ய சிருங்கரால் உருவான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி இளைய சங்கராச்சாரியாருக்கு காஞ்சியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு
எழுத்தின் அளவு:
சிருங்கேரி இளைய சங்கராச்சாரியாருக்கு காஞ்சியில் பக்தர்கள் உற்சாக வரவேற்பு

பதிவு செய்த நாள்

27 அக்
2024
12:10

காஞ்சிபுரம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள், நேற்றிரவு காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவருக்கு, பக்தர்கள், பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கர்நாடகா மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கா நதிக்கரையில், சிருங்கேரி சாரதா பீடம் உள்ளது. ஸ்ரீ ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் பங்கேற்கும் விஜய யாத்ரா, சென்னையில் நடக்கிறது. இதற்காக, கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் இருந்து, காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்திற்கு, ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் சுவாமிகள் நேற்று புறப்பட்டார். தமிழக எல்லையான ஓசூரை நேற்று மாலை, 5:35 மணிக்கு வந்தடைந்தார்.

அவருக்கு, மூக்கண்டப்பள்ளி லால் பஸ் நிறுத்தம் அருகே, தமிழ்நாடு பிராமணர் சங்கம் ஓசூர் கிளை, ஓசூர் பக்த ஜன சபா, ஷேத்ரம் சங்கர தபோவனம், ராதாகிருஷ்ண பஜனை மண்டலி மற்றும் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பக்தர்கள் சார்பில், பூரண கும்ப மரியாதையுடன், மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு, நேற்றிரவு 8:05 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம், ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு விஜயம் செய்தார். கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை வரவேற்றார்.

அங்கு, அனைத்து சன்னிதிகளிலும் பூஜை செய்த ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பின் அங்கிருந்து, 8:35 மணிக்கு காரில் புறப்பட்டு அவர், நேற்றிரவு காஞ்சிபுரம் வந்தடைந்தார். அவருக்கு, பக்தர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர். காஞ்சிபுரத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், நாளை சென்னை வந்தடைகிறார். அங்கு, நவ., 13 வரை தங்கியிருந்து, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar