திருமலைக்கேணியில் கந்தசஷ்டி திருவிழா; நவம்பர் 2ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2024 10:10
நத்தம்; நத்தம் அருகே பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நவம்பர்.2-ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மறுநாள் 3-ம் தேதி முருகப்பெருமான் சிவ பூஜை திருக்காட்சியும், நவ 4-ம் தேதி சிவ உபதேச திருக்காட்சியும், நவ 5-ல் அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளல் நிகழ்ச்சியும், நவ.6 ல் வேல்வாங்கும் திருக்காட்சியும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கந்தசஷ்டி சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலை நடைபெறுகிறது. மறுநாள் 8-ம் தேதி காலை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இத்துடன் கந்தசஷ்டி திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் பாலசரவணன் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.