பதிவு செய்த நாள்
28
அக்
2024
10:10
கோவை; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் -காஞ்சிபுரம் வேத தர்மசாஸ்திர பரிபாலன சபை சார்பில், ராம் நகர் கோதண்டராம சுவாமி தேவஸ்தானத்தில் கடந்த 24ல், வருஷ வேத சம்மேளன நிகழ்ச்சி துவங்கியது. கர்மானுஷ்டானங்கள் நமது வாழ்க்கையோடு இணைந்தது. அதை முறைப்படி செய்யும் போது, முழுப்பலனை அடைய முடியும் என்ற, மகரிஷிகளின் கருத்தை வலியுறுத்தும் வகையில் வேதபாராயணங்களும் உபன்யாசங்களையும் கேட்டு, நம் மனதை வலுப்படுத்த வேண்டும். அதற்கேற்ப அக்., 24 காலை 7:30 மணிக்கு, வேதவியாச பூஜை நடந்தது. அதை தொடர்ந்து, காலை 8:00 முதல் 11:30 மணி வரை ரிக் வேதம், யஜூர் வேத பூஜை நடந்தது. மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சாம, அதர்வன வேத பாராயணம் நடந்தது. கடந்த 26ம் தேதி நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று காலை 7:30 மணிக்கு, வேதவியாச பூஜையும் தொடர்ந்து காலை 9:30 மணிக்கு சிறப்பு ஹோமமும் நடந்தது. தொடர்ந்து, பிரம்மஸ்ரீ கேசவ வாஜபேயர் சொற்பொழிவு நிகழ்த்தினார். காஞ்சி மஹா பெரியவரின் விக்ரகத்துக்கு சிறப்பு பூஜையும், அபிஷேகமும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.