பதிவு செய்த நாள்
29
அக்
2024
04:10
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காய்கறி அலங்காரத்தில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவனின் தரிசனம் பெற்றனர்.
* போடி அருகே பிச்சாங்கரை மலைப் பகுதியில் அமைந்துள்ள கைலாய கீழச் சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், திருமலாபுரம் முத்துமாரியம்மன் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம்,தீபாராதனைகள் நடந்தது.