கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என். நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் தீபாளி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பத்ரகாளியம்மன், கலையநல்லுார் வயல்வெளியில் தானாக தோன்றிய ஐந்தரை அடி உயரம் கொண்டது சிறப்பு பெற்றதாகும். தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று இங்குள்ள பத்ரகாளியம்மன், பெரியநாயகி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து காளியம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இக்கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி பிரதி அமாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பலா யாகமும், இங்கு தோஷங்களுக்கான பரிகார பூஜைகளும் வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் நடத்தப்படுகிறது.