பதிவு செய்த நாள்
02
நவ
2024
05:11
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவில் சுப்ரமணியர் கோவிலில் கந்தசஷ்டி விழா துங்கியது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில், சுப்பிரமணியர் கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா துவங்கியது. மாலை 6:30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், யாகசாலை பூஜை, சத்ருசம்ஹார சுப்பிரமணிய திரிசதி நாமாவளி, ஹோமம், மூல மந்திரம், காயத்ரி மந்திரம், பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி மூலவர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர்க்கு மகா அபிஷேகம், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, தொடர்ந்து உற்சவர் புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக 6ம் நாள் சூரபத்மனை முருகன் வதம் செய்யும் வைபவம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.