இளையான்குடி; இளையான்குடி அருகே லெட்சுமிபுரம் கிராமத்தில் இல்ல முத்துமாரியம்மன், பாமா ருக்மணி சமேத வேணுகோபால கிருஷ்ணன் கோயில்களில் மண்டல பூஜை விழாவை முன்னிட்டு சுவாமிகளுக்கு அதிகாலை பால், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர்,திரவியம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானமும் நடந்தது. கோயில் முன்பாக உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.