கம்பராயப் பெருமாள் கோயில் திருப்பணி வேலைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24நவ 2012 10:11
கம்பம்:கம்பம் கம்பராயப் பெருமாள் உடனுறை காசிவிஸ்வநாதர் கோயிலில், திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கம்பம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கம்பராயப் பெருமாள் உடனுறை காசிவிஸ்வநாதர் கோயில். ஒரே வளாகத்தில் சிவனுக்கும், பெருமாளுக்கும் பிரதான கோயில்கள் அமையப் பெற்றது இந்த கோயிலின் சிறப்பு. பிரசித்திபெற்ற இக்கோயிலில் சிவன் கோயில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது பெருமாள் கோயிலில் திருப்பணி செய்து, கும்பாபிஷேகம் செய்ய முடிவு ய்யப்பட்டுள்ளது.திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கான செலவுகளை தனியார் டிரஸ்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.விக்ரகங்களுக்கு சிறப்பு ஆராதனைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன. நேற்று காலை பாலாளய பூஜையை முன்னிட்டு, பக்தர்கள் பங்கேற்றனர்.