வேதாரண்யம்: வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி சிவலிங்கத்துக்கு, 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதில், புனித நீரில், 1,008 சங்குகளை வைத்து, சிறப்பு பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தினர். இதேபோல வேதை காசிவிஸ்வநாதர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், கோடியக்காடு குழகர் கோவில் உள்ளிட்ட சிவன்கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.