Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துாரில் நாளை சூரசம்ஹாரம்; ... சங்கர லிங்கனார் சித்தர் குருபூஜை விழா விமரிசை சங்கர லிங்கனார் சித்தர் குருபூஜை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் பழநி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் பழநி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா

பதிவு செய்த நாள்

06 நவ
2024
03:11

காஞ்சிபுரம்; பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழநி ஆண்டவர் முருகப்பெருமான் கோவிலில் 15ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹார பெருவிழா கடந்த 1ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் துவங்கியது. இரண்டாள் நாளான நவ., 2ம் தேதி, காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், வீரவாகு காப்பு கட்டும் நிகழ்வும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் வீதியுலாவும், தொடர்ந்து சூரன் வதம் செய்யும் நிகழ்வு நடந்தது. நவ., 3ம் தேதி, காலை, மூலவர் பழநி ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், காலை 9:00 மணிக்கு அமரேஸ்வரர் கோவிலில் இருந்து, பம்பை, தவில், நாதஸ்வரம் வாத்தியங்கள் இசைக்க, முருக பக்தர் சுரேஷ், தனது உடலில், 108 வேல் தரித்து முன்னே செல்ல, 108 பெண்கள் பால்குடம் ஏந்தியபடி, முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக பழநி ஆண்டவர் கோவில் சென்றனர். தொடர்ந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. மாலை முருகப்பெருமான் வீதியுலாவும், சிங்கமுகா சூரன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது.


ஆறாம் நாள் உற்சவமான இன்று காலை 9:00 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து வீதியுலாவும், சூரன் தன் பூத சேனைகளுடன் திக்விஜயம் செய்யும் நிகழ்வும் நடந்தது. மாலை பானுகோபன் வதம் செய்யும் நிகழ்வும் நடந்தது. நாளை காலை 8:00 மணிக்கு அரசு காத்த அம்மன் கோவிலில் இருந்து சக்திவேல் பெறும் நிகழ்வும், இரவு 9:00 மணிக்கு வீரவாகு துாதும், சூரசம்ஹாரம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாட்டை நெமந்தகார, ஒற்றைவாடை, கற்பக பிள்ளையர், இரட்டை பிள்ளையார், கனக சுப்பராய தெரு என, ஐந்துதெரு வாசிகள் இளைஞர் அணியினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar